Connect with us

நடிகர் விமல் மீது பண மோசடி புகார் ;; தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது !!

vimal

பொழுதுபோக்கு

நடிகர் விமல் மீது பண மோசடி புகார் ;; தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது !!

மன்னர் வகையறா படத்தில் பணமோசடி செய்ததாக நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் கோபி இடையே கடந்த 4 வருடங்களாக மிகப்பெரிய மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் மன்னர் வகையறா படத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் கோபி ஆகியோர் சுமார் 5 கோடி மோசடி செய்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்காரவேலன், கோபி மற்றும் கணேசன் போன்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழங்கு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் நடிகர் விமல் மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் தீவிரப்படுத்தப்பட்டு தயாரிப்பாளர் சிங்காரவேலனை கைது செய்துள்ளனர்.

இதனிடையே நடிகர் விமல் தனக்கு கதை சொல்லவந்த நபரிடம் தயாரிப்பாளர் 5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மேலும் ஒரு புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையிலும் மேலும்  நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top