யூடியூப் சேனல்கள் மூலம் பெண்களிடம் பணமோசடி! இரு பெண்கள் கைது!!

யூடியூப்

இளைஞர்கள், இல்லத்தரசிகள், பெரியவர்கள் என அனைவருக்கும் யூடியூப் மோகம் அதிகமாக காணப்பட்டுள்ளது. அவர்கள் பார்த்து மகிழ்வது மட்டுமல்லாமல் தற்போது தாங்களே யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் யூடியூப் சேனல் என்பது அதிக ஆர்வம் உள்ளதாக காணப்படுகிறது.

யூடியூப்

அவர்கள் தங்கள் வீடுகளில் செய்யும் உணவுகள் மற்றும் பலவற்றை யூடியூப்பில் பதிவு செய்து பயனடைகின்றனர்.இதனால் பலரும் பயனடைந்துள்ளனர்.

பலரும் இதனை லாபகரமாகப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி வருகின்றனர். இதன் வரிசையில் யூடியூப் சேனல்கள் மூலம் மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி செயல் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் 3 யூடியூப் சேனல்கள் மூலம் தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கோவையில் அலுவலகம் வைத்து மோசடி செய்துள்ளனர்.

சரளாதேவி, கோதை நாச்சியார் என்ற இரு பெண்கள் கும்பலாக பல பெண்களிடம் மோசடி செய்துள்ளனர்.இதனை அறிந்த போலீசார் மோசடி செயலை தடுத்து அவர்களை கைது செய்துள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print