திங்கட்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

திங்களுக்கான கிரகம் சந்திரனாகும். இந்த சந்திரன் கிரகத்திற்கு உரிய நாட்களில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிகம் பிரியம் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் வெளியில் இருப்பதை விட வீட்டில் மனைவி, குழந்தைகள் என்று இருக்க ஆசைப்படுவார்கள்.

இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கும், மனதில் அவ்வப்பொழுது ஏதேனும் முடிவு மாற்றி கொண்டே இருப்பார்கள். மனம் மாறிக்கொண்டே இருப்பதால் சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள். இவர்களுக்கு பல வித உணர்வுகள் தோன்றும்.

திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எழுத்துறை, கற்பனை சம்பந்த பட்ட துறையில் பணிபுரிவார்கள். இவர்களுக்கு பல வித கதாபாத்திரங்கள் தோன்றும், அதனை வைத்து திகில், குடும்பம், சிறு மற்றும் பெரும் தொடர்களை எழுதுவார்கள்.

இவர்களுக்கு ஊர் சுற்றுவது பெரும்பாலும் பிடிக்காது, ஆனாலும் கடல் சார்ந்த பயணங்கள் நன்மை தரும். இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். இவர்கள் மெதுவாக, சத்தம் இல்லாமல் பேச கூடியவர்கள். திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் சத்தம் உயர்த்தி பேசுவது என்பதே அரிதாகும். அமைதி மிகவும் பிடித்தமான விஷயம் என்பதால் உங்களை சுற்றி இருக்கும் சூழல் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

திங்கட்கிழமையில் பிறந்த பெண்களுக்கு உடல் சோர்வு, அனீமியா, மனநிலை மற்றும் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். இவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பெண்கள் திங்கட்கிழமையில் பிறந்து இருந்தால் அவர்கள் குடும்பத்தை நன்றாக நிர்வாகம் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த மனைவியாகவும், அம்மாவாகவும் இருப்பார்கள். சமையல் செய்வது, வீட்டை பார்த்துக்கொள்ளுவது என்று அக்கறையுடன் இருப்பார்கள். இவர்கள் சமையல் செய்வதில் கெட்டிக்காரர்கள். இவர்கள் விதவிதமான சமையல் செய்வதில் வல்லுனராக அல்லது ருசியான சமையல் செய்யக்கூடியவராக இருப்பார்கள்.

ஆண்கள் பெரும்பாலும் விதவிதமான சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவார்கள். ஒரு சிலர் கஞ்சத்தனமாக இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கமாக வாழ்வார்கள். இவர்கள் நீர், கடல், ஹோட்டல், உணவு தயாரித்தல், எழுத்து, வீட்டில் இருந்தபடி வேலை, விளம்பரம், கற்பனை சார்ந்த துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள்.

இவர்களிடம் வசீகரமான தோற்றம், நகைச்சுவையான பேச்சு இருக்கும். எளிதில் மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள். ஒரு சிலர் தங்கள் நண்பர்களுடன் அதிகம் காணப்படுவார்கள். இவர்கள் சென்சிடிவ் குணம் படைத்தவர்கள் என்பதால் அதிகம் பயணம் செல்ல விரும்பமாட்டார்கள். ஒரு சிலர் அதற்கு மாறாக இருப்பார்கள். மேல கூறியது அனைத்தும் திங்கட்கிழமையில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள். ஒவ்வொருக்கும் ஜாதகத்தில் நடைபெறும் தசை புக்தி மற்றும் கட்டத்தை வைத்து பலன்கள் மாறுபடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews