இனி புகைப்பிடிக்கக் கூடாது!! நியூசிலாந்தில் சட்டம் நிறைவேற்றம்..!!

வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு மத்தியில் புகைபிடித்தல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இவற்றைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

இவற்றை கருத்தில் கொண்டு நியூசிலாந்தில் 2009ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்க வாழ்நாள் தடை சட்டம் விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் புகையற்ற சூழல், புகையில்லா எதிர்காலம் மற்றும் புகையிலை பயன்படுத்துறை குறைத்தல் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அந்நாட்டில் உள்ள பெரியவர்களிடம் புகைப்பிடித்தல் பழக்கம் குறைந்து காணப்படும் நிலையில் 2025ம் ஆண்டுக்குள் புகைப்பிடிப்போர் இல்லாத நாடாக விளங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

அதே போல் சட்டத்தினை மீறி புகைப்பிடித்தல் மற்றும் புகை பொருட்கள் விநியோகம் செய்தால் 79 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.