மோகன்லால் மீனா நடித்த ’த்ரிஷ்யம் என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் அந்த படம் சூப்பர்ஹிட் என்பதும் தெரிந்ததே
தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவான திரைப்படத்தில் கமல்ஹாசன் கவுதமி நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் 100 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
இதன்படி அமேசான் பிரைமில் வரும் பிப்ரவரி மாதம் ’த்ரிஷ்யம் 2’திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது