Connect with us

மீரா மிதுனிடம் கோபத்தில் கத்திய மோகன் வைத்யா

Entertainment

மீரா மிதுனிடம் கோபத்தில் கத்திய மோகன் வைத்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிக முக்கியமான கட்டமான எவிக்ஷனில் அடியெடுத்து வைத்துள்ளனர் போட்டியாளர்கள். ஒற்றுமையா இருக்கிற மாதிரி வெளியே காட்டிக் கொண்டாலும், இவர்களுக்குள் இவ்வளவு குரூர எண்ணங்களா? என்று கேட்கும் அளவு இருந்தது இந்த எபிஸோடு.  

4e44e96ce48d577a0cf855453590da24-1

இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ அதிரடியாக வெளியாகியிருக்கிறது. அதில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கை யார் உதவி இல்லாமல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மீறி மீரா யாருக்கோ உதவியிருக்கிறார்.

பிக்பாஸிடமிருந்து வந்த லெட்டரைப் படித்த கவின், மீராவிடம், “ஹெல்ப் பண்ணக் கூடாதுன்னு ஒரு ரூல் இருக்குல்ல என்று கேட்க, நான் இண்டேரக்ட்டா தான் ஹெல்ப் பண்றேன் என்கிறார் மீரா.

56219159940a08d2cffa356d3d325070

“ரூல்ஸ் படிச்சது நான். எனக்குத் தெரியாதா?” என்ற கவினிடம், “நீ பேசாத” என்று கோபமாகிறார் மீரா.  ”உனக்கு தெரியலன்னா இன்னொருமுறை ரூல்ஸ் படி; உன் கிட்ட யாரும் சும்மா சண்டைக்கு வரல” என கவின் கூறும்போதே மீரா பதில் கூறுகிறார்.

இடைமறித்து “வயது வித்தியாசம் பார்த்து பேசு மீரா” என மோகன் வைத்யா கூறுகையில், அதை காதில் வாங்காமல் மீண்டும் தன்னை நியாயப்படுத்துகிறார் மீரா.

“வயசு வித்தியாசம் பார்த்து பேசு மீரா. சும்மா எல்லார்கிட்டயும் கத்துற மாதிரி கத்துற; நான் சொல்றேன்ல, வயசுக்கு மரியாதை குடு” என கோபத்தில் சீறுகிறார் மோகன் வைத்யா.

வழக்கம்போல் இன்றும் மீராவின் அழுகை காத்திருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top