நீண்ட இடைவேளைக்கு பின் மோகன் நடிக்கும் புதிய படம்! பர்ஸ்ட் லுக் உள்ளே!!

80களில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் மோகன். இவர் 1991ம் ஆண்டு வெளிவந்த உருவம் படத்துக்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் சில வருட இடைவெளிக்கு பிறகு 1999ம் ஆண்டு வந்த அன்புள்ள காதலுக்கு படத்தில் நடித்தார்.

ஆனால் 80களில் எப்படி பிஸியான நடிகராக தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாரோ அத்தகைய பிஸியான நிலையை அவர் அடையவில்லை.

அன்புள்ள காதலுக்கு பிறகு சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார் அந்த படமும் போதிய வெற்றியை பெறவில்லை. அதற்கு பிறகு சில கன்னட படங்களில் நடித்தார்.

இருந்தாலும் 80களின் வெள்ளி விழா நாயகன் என்ற நிலை போல அவரால் எந்த வெற்றிப்படத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை.

இருப்பினும் இன்னும் மனம் தளராது அவர் கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ  இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஹரா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அவர் ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment