Connect with us

“மோடியின் பிறந்தநாள் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சி” மக்கள் அதிருப்தி!!

News

“மோடியின் பிறந்தநாள் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சி” மக்கள் அதிருப்தி!!

88aaea336b342122ba2ba808f27782f9

தற்போது இந்தியாவில் மத்திய அரசாக காணப்படுகிறது பாஜக. மேலும் இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நம் தமிழகத்திலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி.24c972f27562aed01f328c22fbd2d4ec

மேலும் அவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் அவரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றோர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளை ஒட்டி நம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடந்து கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் அவர் பிறந்த நாளை ஒட்டி குப்பை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இதற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதன்படி பாஜகவின் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் குப்பைகளை விட்டு சென்றதால் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பைகள் அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று குப்பைகளை அகற்றினர். குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைத்து நிகழ்ச்சி முடிந்தபின் மூட்டைகளை கடற்கரையை விட்டு சென்றனர். இதனால் இச்செயலுக்கு பொதுமக்கள் அதிருப்தியிணை காட்டியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top