Connect with us

மோடிஜி உடனடியாக நிலக்கரி விஷயத்தில் தலையிடுங்கள்..!!: ஸ்டாலின்

stalin meets modi

செய்திகள்

மோடிஜி உடனடியாக நிலக்கரி விஷயத்தில் தலையிடுங்கள்..!!: ஸ்டாலின்

மோடிஜி உடனடியாக நிலக்கரி விஷயத்தில் தலையிடுங்கள்..!!: ஸ்டாலின்

நம் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் மாணவ மாணவிகள் அவதிப்படுவதாக தெரிகிறது.

ஏனென்றால் அடுத்த மாதம் தமிழகத்தில் பொது தேர்வு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து சில அறிவிப்பு கிடைத்தது.

அதன்படி இன்னும் மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் மின்வெட்டு அதிகமாக இருக்கலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார். அதன்படி நிலக்கரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் வினியோகத்தை பராமரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடையில்லா மின் வினியோக விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top