ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்பு!

நம் தமிழகத்திற்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஏனென்றால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஜனவரி 12-ஆம் தேதி அன்று மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற உள்ள நிலையில் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதனால் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினரான பிரதமர் மோடியை வரவேற்க நாதஸ்வரக் கலைஞர்கள், ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தமிழக பாஜகவின்  மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment