ரசாயனத்தில் இருந்து மீட்டு இயற்கையோடு இணைக்க வேண்டும்! இயற்கை விவசாயத்திற்கு திரும்ப மோடி வலியுறுத்தல்!!

முன்னொரு காலத்தில் உணவே மருந்து என்ற கொள்கை தான் காணப்பட்டது. ஏனென்றால் அனைத்து உணவுப் பொருட்களும் கலப்படம் இல்லாமல் இருந்தது. காலங்கள் செல்ல செல்ல விவசாயத்திலும் கூட ரசாயனக் கலவைகளின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

farmer

இந்த நிலையில் பலரும் இயற்கை விவசாயத்திற்கு மெல்ல மெல்ல திரும்புகின்றனர். இந்த இயற்கை விவசாயத்துக்கு திரும்ப பாரத பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதன்படி ரசாயன சோதனைச் சாலையில் இருந்து விவசாயத்தை மீட்டு இயற்கை என்னும் சோதனைச்சாலை உடன் இணைக்க வேண்டும் என்று மோடி கூறினார்.

இயற்கை சோதனைச்சாலை என்று தான் குறிப்பிடுவதும் அறிவியல் பூர்வமானதுதான் என்று பிரதமர் மோடி பேசினார். விதைகள் முதல் மண்வளம் வரை அனைத்துக்கும் இயற்கை வழியில் தீர்வுகாண முடியும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் தொடர்பான மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார் பிரதமர் மோடி. இயற்கை விவசாயத்தின் மூலம் சிறு விவசாயிகள் 80 சதவீதம் பேர் பயனடைவார்கள் என்றார் மோடி.

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் பெருந்தொகையை ரசாயன உரங்களுக்கு செலவிடுகின்றனர் என்றும் கூறினார். இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சிறு விவசாயிகள் மிகுந்த பயனடைவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வேளாண்மையில் நாம் கடைபிடிக்கும் தவறான நடைமுறைகளை கைவிட வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment