நாங்க வேல்ர்ட்டு பேமஸ் பாத்துக்கோங்க.. உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த மோடி!

இந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. பாஜக அட்சியின் சார்பில் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பணியாற்றுகிறார்.

60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியினை பாஜக ஒரே தேர்தலில் வென்று இந்தியாவைப் பிடித்தது. குஜராத்தில் பல வியக்க வைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி அதன்மூலம் பிரபலமான மோடி ஒரே தேர்தலில் மக்களின் செல்வாக்குடன் ஆட்சியைப் பிடித்தார்.

ஆனால் அதன்பின்னர் பாஜக ஆட்சி மீது தமிழகம், கேரளா உள்பட சில தென்னிந்திய மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியது.

பாஜக ஆட்சிக்கு எந்த அளவு எதிர்ப்பு உள்ளதோ அதே அளவு வரவேற்பு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனை நிரூப்பிக்கும் வகையில் உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிடுள்ளது.

இந்த பட்டியலில் உலகில் மிக பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். மோடிக்கு 71 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 2 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு மோடிக்கு 63 சதவீத ஆதரவு இருந்தநிலையில் தற்போது அந்த ஆதரவு தற்போது 71 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment