Connect with us

பருத்தி, நூல் விலையினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்க மோடி ஜி!! – முதல்வர் கடிதம்…

stalin

தமிழகம்

பருத்தி, நூல் விலையினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்க மோடி ஜி!! – முதல்வர் கடிதம்…

நூல் விலையினை கண்டித்து தமிழகத்தில் ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளித் தொழிலாளர்கள் கடையடைப்பு, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நூல்விலையினை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரிசெய்வதற்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதாவது நிதித்துறை, ஜவிளித் துறை, வர்த்தகத் துறை போன்றவற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு பருத்தி இறக்குமதி வரியை செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

குறிப்பாக பருத்தி இறக்குமதி வரி ஜூன் மாதத்துடன் காலகெடு முடிவடைவதால் இதனை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜவுளித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top