வீரர்களுடன் பேசும் மோடி: ஜூலை 13ல் காணொளி வாயிலாக….

74343b06bd48e97735e4d85c9fa6e398-1

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் உடன் பிரதமர் மோடி வரும் 13ஆம் தேதி காணொளி வாயிலாக உரையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பதும் இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 11 பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்கள் உள்பட இந்திய வீரர்கள் 120 பேர்களுடன் ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி காணொளி வாயிலாக பேசப்போகிறார் 

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்க போவதாகவும் அனைவரும் தாய்நாட்டின் பெருமையை காப்பாற்றும் வகையில் பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment