இசைஞானி இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் ஒன்றுக்கு சமீபத்தில் முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த முன்னுரையில் மோடி ஆட்சியில் கொண்டு வந்துள்ள சட்டங்கள் மற்றும் திட்டங்கள் பெண்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியதால் ‘மோடியும் அம்பேத்கரும்’ என கூறுவதில் பெருமை படுவதாக கூறியிருந்தார்.
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல அரசியல் கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
ஆனால் தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்த பிறகு தான் இவ்வாறு எழுதியதாகவும், தனது கருத்தை வாபஸ் பெற முடியாது என இளையராஜா கூறியிருந்தார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். அப்போது தன்னை அம்பேத்காருடன் ஒப்பிட்டு கூறியதற்கு நன்றி தெரிவித்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றனர்.