இன்று காலை ரஷ்யா, உக்ரைன் நாட்டின் சில பகுதிகளில் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்று வட்டாரத்தில் இருந்து இன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் மோடி பேச உள்ளதாகவும் தகவல் கசிந்தது.
அதனை உறுதி செய்யும் விதமாக உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
35 நிமிடங்கள் நீடித்த உரையாடலில் உக்ரேனில் நிலவும் போர்ச்சூழல் குறித்து மோடியும், ஜெலன்ஸ்கியும் விவாதித்தனர். போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. உக்ரேனில் இருந்து இந்தியர்களை அழைத்து செல்வதற்கு உதவியதற்காக உக்ரைன் அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.