ரஷ்ய அதிபருடன் மோடி! இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஒத்துழைப்பு!

இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரேன் அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மீட்பதற்கு உதவி செய்ததற்கு நன்றி என்றும் மோடி கூறினார்.

கிட்டத்தட்ட இந்த பேச்சுவார்த்தை 34 நிமிடங்கள் நடை பெற்றதாக கூறப்பட்டது. அதன்பின்னர் இன்று பிற்பகல் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை இருக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அதில் இந்திய மாணவர்களை மீட்க ஒத்துழைப்பு தருவதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இவ்வாறு உறுதியளித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாரத பிரதமர் நரேந்திர மோடி சுமார் 50 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். சுமி உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள மாணவர்களை வெளியேற்ற தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்து மோடி பாராட்டினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment