Connect with us

ஆட்டத்தை தொடங்கிய மோடி; ‘மூன்று நாட்கள் மூன்று நாடுகள்’ மீண்டும் ஒரு சுற்றுப் பயணம்…!

modi

செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய மோடி; ‘மூன்று நாட்கள் மூன்று நாடுகள்’ மீண்டும் ஒரு சுற்றுப் பயணம்…!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது குறித்து சர்ச்சையான கருத்துக்கள் வந்தாலும் தற்போது இவை மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

ஏனென்றால் இந்த சுற்றுப்பயணத்தின் காரணமாக இந்தியாவுடன் உலக நாடுகள் அனைத்தும் மிக நெருங்கிய நட்புடன் காணப்படுகின்றன. இந்த நிலையில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி மே 2, 3, 4 ஆகிய 3 தேதிகளில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். முதலில் ஜெர்மனிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு பெர்லின் பிரதமர் ஒலாப் சோல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அந்நாட்டு பிரதமர் மெட் பிரெடரிக்சனை சந்தித்து பேசுவார் என்றும் அறிவித்துள்ளது. மே 4 ஆம் தேதி அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top