குன்னூர் விபத்து என் மனதை பாதித்தது! மனதின் குரல் நிகழ்ச்சியில் மனந்திறந்து பேசினார் பிரதமர் மோடி!!

நாடெங்கும் ஒமைக்ரானின் அலை வேகமாக பரவி வருகிறது. இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதன்படி ஒமைக்ரான் எதிர்கொள்ள நாம் எல்லாரும் தயாராக இருக்கவேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.

narendramodi

கொரோனாவின் புதிய உருவம் கதவை தட்ட தொடங்கியுள்ளது என்றும் கூறினார், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அதோடு மட்டுமில்லாமல் குன்னூர் விபத்து பற்றியும் கூறியுள்ளார். அதன்படி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி இறந்தது  என் மனதை பாதித்தது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வருண் சிங் மரணத்தோடு பலநாட்கள் சாகசம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தி நம்மை விட்டு பிரிந்து சென்றார் என்றும் மோடி கூறினார். குன்னூர் விபத்தில் இறந்த குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு இந்த ஆண்டில் சவுர்யா சக்ரா விருது தரப்பட்டது என்றும் மோடி கூறினார்.

இந்திய கலாசாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அதை பரப்பும் பல்வேறு நாட்டினர் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார். வரவிருக்கும் புத்தாண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை அளித்து புதிய அத்தியாயத்தை எழுதும் என நம்புகிறேன் என்று மோடி கூறினார். புத்தகங்கள் நமக்கு அறிவை கொடுப்பதோடு அது நமது வாழ்க்கையை செதுக்குகிறது என்றும் பிரதமர் மோடி பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment