மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம்-பிரதமர்

10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி தில்லியில் வீடியோ கான்ஃப்ர்ன்சிங் முறையின் மூலம் உரையாடினார்.

அவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இந்த உரை இருந்தது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 1400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார். மேலும் இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:

“உங்களுடன் கலந்துரையாடும் இந்த நாளை என் தேர்வு நாளாகவே கருதுகிறேன். ஆசிரியர் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்றால் தான் மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். என்னை உங்கள் நண்பனாகக் கருதுங்கள்.

தன்னம்பிக்கை என்பது மாத்திரையோ மூலிகையோ அல்ல. அதை தினந்தோறும் நடைமுறையிலேயே நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.

தேர்வுகளை திருவிழாவைப் போன்று மகிழ்ச்சியான மனநிலையுடன் எதிர் கொள்ளுங்கள். இயற்கையான சூழலுடன் இணைந்திருங்கள் மனதை ஒருநிலைபடுத்த யோகா மேற்கொள்ளுங்கள். ஒருநிலைபடுத்தும் போது எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.”

என்று அறிவுரை வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment