Modi திறக்கக்கூடாது – நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தொடர்பான வழக்கு இன்று விசாரணை

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க போவது இல்லை என்றும் அறிவித்துள்ளன.

மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வைத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்கறிஞர் சி ஆர் ஜெயசுவின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்திய அரசியல் சட்ட பிரிவு 79ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றை உடனடியாக கூட்டவோ அல்லது கலைக்கவோ அதற்கான முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு தான் உள்ளது.

எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவைச் செயலகத்திற்கு வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 18ஆம் தேதி மக்களவைச் செயலக பதிவாளர் வெளியிட்ட அறிக்கை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை என்றும் இதன் மூலம் மக்களவைச் செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க இலவச சலுகை !

இதனிடையே நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பதை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜனநாயக நாட்டில் பழங்குடியினரை அவமானப்படுத்தும் விதமாக அரசியல் செய்யும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.