Connect with us

கையில் பூக்கொத்து நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மோடி!!!

murmu modi

செய்திகள்

கையில் பூக்கொத்து நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மோடி!!!

இன்றைய தினம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு முன்னிலையில் வகித்து வருவதாக தெரிகிறது.

அதன்படி மூன்று சுற்றுகளிலும் திரௌபதி முர்மு எதிர்த்து போட்டியிட்டுள்ள எஸ்வந்த் சின்காவை முந்தி முன்னிலையில் உள்ளார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் எஸ்வந்த் சின்கா வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் என்ற முறையில் அரசமைப்பில் பாதுகாப்பாளராக முர்மு செயல்படுவார் என்றும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்க உள்ள நிலையில் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தை தெரிவித்துள்ளார். திரௌபதி முர்முக்கு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top