
News
கைகொடுத்து, கட்டித்தழுவிய போப் பிரான்சிஸ்-மோடி சந்திப்பு! பரிசாக வெள்ளி மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்!!
கைகொடுத்து, கட்டித்தழுவிய போப் பிரான்சிஸ்-மோடி சந்திப்பு! பரிசாக வெள்ளி மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்!!
இன்றைய தினம் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி நாட்டிற்கு சென்றார். இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க சென்றதாக கூறப்படுகிறது. ஜி-20 மாநாடு முடிந்த பின்னர் இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் பகுதிக்கு சென்று போப் பிரான்சிஸ்ஸை நேரில் சந்தித்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
ரோமில் இருந்து வாடிகன் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை பேராயர்கள் வரவேற்று அரண்மனைக்கு அழைத்து சென்றனர். பிரதமர் மோடியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் சென்றனர்.
வாடிகன் அரண்மனையில் போப் பிரான்சிஸ்ஸை சந்தித்து பாரத பிரதமர் மோடி பேசினார். அவர்கள் சந்திப்பு 20 நிமிடங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த போதும் சந்திப்பானது ஒரு மணி நேரம் நீடித்தது.
மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கை போப்புக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி பரிசளித்தார். அதோடு மட்டுமல்லாமல் தி கிளைமேட் கிளைம்ப் என்னும் நூலையும் பாரத பிரதமர் மோடி பிரான்சிஸ்க்கு வழங்கினார்.
கொரோனா மற்றும் அதன் விளைவுகளும் உலக மக்களை பாதித்துள்ளது பற்றியும் போப்-பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர் கொண்டுள்ள சிக்கல்களை பற்றி பேசியுள்ளனர். கொரோனா சூழலில் தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா உதவி செய்ததை போப் பிரான்சிஸ் பாராட்டியுள்ளார்.
