Entertainment
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா- பிரதமர் மோடி இன்று மதுரை வருகை
மதுரையில் திருப்பரங்குன்றத்திற்கு அடுத்ததாக உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று 27.01.2019ல் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணிக்கு, மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மோடி கொச்சிக்கு செல்கிறார்.
மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. விஜயகுமார், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில் சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர் டி.ஐ.ஜி.க்கள், 15 எஸ்.பி.க்கள், 40 டி.எஸ்.பி.க்கள் உள்பட சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
