இந்தியாவில் பாஜக பொறுப்பேற்றவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணத்தின் போது 25 நிகழ்வுகளில் பங்கேற்க இருப்பதாகவும் ஒவ்வொரு நாடுகளிலும் சுமார் 65 மணி நேரம் செலவிடப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இப்பயணத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த எட்டு உலகத் தலைவர்களை சந்திப்பதாகவும் அதோடு உலக நாடுகளை சேர்ந்த 50 வணிகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது.
மேலும், வருகின்ற மே 4 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் செல்ல இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.