
Tamil Nadu
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் மோடி ஜி !! – முதல்வர் காரசார பேச்சு..
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம் கேரளம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரையை குறைக்காமல் இருப்பதற்கு மாநில அரசுதான் காரணம் என கூறினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதற்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலை குறைக்காத காரணத்தினால் நாட்டில் பெட்ரோல் டீசல் விலையினை குறைக்க முடியவில்லை என பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டினார்.
இதனால் அவர் கூறியது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இந்த கருத்தை கூறியதாக தெரிவித்தார். கடந்த 2014- ஆம் ஆண்டு ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாகவும் ஆனால் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்காமல் இருந்ததாக தெரிவித்தார்.
இதனிடையே கச்சா எண்ணெய் விலையில் கிடைத்த லாபம் முழுவதும் மத்திய அரசு எடுத்துக்கொண்டதாக கூறினார். பெட்ரோல் டீசல் கலால் வரி ஆனது மாநில அரசுகளுடன் பகிர்ந்து அளிப்பது என்ற காரணத்தால் அதனை குறைத்து மாநில அரசின் மீது மத்திய அரசு கைவைத்தாக கூறினார்.
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது என சட்டப்பேரவையில் முதல்வர் கூறினார். சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பது போல் மத்திய அரசு நாடகம் ஆடியதாக கூறினார்.
மேலும், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு கடந்த சில வாரங்களில் பெட்ரோல் டீசல் விலையை கிடுகிடுவென உயர்த்தியதாக மத்திய அரசை குற்றம் சாட்டினார். ஆனால் தமிழக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருப்பதாக கூறினார்.
