வெறும் 2 கோடீஸ்வரர்களுக்காகவே மோடி கடினமாக உழைக்கிறார்!: ராகுல்
இந்தியாவில் இருபெரும் தேசிய கட்சியாக காணப்படுவது பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி. மத்திய அரசாக உள்ள பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கட்சி நாள்தோறும் விமர்சித்துக் கொண்டே வரும்.
அதுவும் தற்போது தேர்தல் சமயம் என்பதால் தினந்தோறும் விமர்சனங்களை நாம் காண்கிறோம். குறிப்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோதே ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பல்வேறு குற்ற சாட்டை வைத்தார்.
இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வெறும் இரண்டு கோடீஸ்வரர்களுக்காகவே கடுமையாக உழைக்கிறார் என்று கூறியுள்ளார். அதன்படி இரண்டு கோடீஸ்வரர்களுக்காகவே நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச மறுக்கிறார் என்றும் அவர் மீது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மோடி அது குறித்து பேச மறுப்பது ஏன்? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததன் மூலம் பயன் அடைந்தது யார்? என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளார்.
