பொம்மன், பெல்லியை சந்திக்க வரும் மோடி !

இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, தி எலிஃபண்ட்ஸ் விஸ்பரர்ஸ் தம்பதியை சந்திக்க உள்ளதால், அவர்களுக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

புதிய விமான நிலைய முனைய திறப்பு விழா, மத்திய ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 9-ம் தேதி முதுமலைக்கு வரும் அவர், சமீபத்தில் 95வது அகாடமி விருதுகளை வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக இருந்த பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகளைச் சந்திக்கிறார்.

1 டூ 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு… கோடை விடுமுறை குறித்து “குளுகுளு” அறிவிப்பு!

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, பொம்மன் மற்றும் பெல்லி என்ற பழங்குடி தம்பதியினருக்கு ரகு என்ற அனாதை யானைக்கு ஒப்படைக்கப்பட்ட கதையை குறித்து படமாக்கப்பட்டுள்ளது .

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.