மாநில தொழில்துறை அமைச்சர்களுடன் மோடி கலந்துரையாடல்!! என்ன காரணமாக இருக்கும்?

இந்தியா தற்போது தொழில் துறையில் மிகவும் முன்னேறிக் கொண்டு வருகிறது. இது அனைவரின் வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக மாறி உள்ளது. மேலும் தொழில் துறை தொடர்பாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மாநில துணை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவார்.

அந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு விதமான அறிவிப்புகளும் வெளியாகும். அந்த வகையில் இன்றைய தினமும் மாநில அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொழில்துறை அமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல் செய்கிறார். மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் இரண்டாம் நாள் மாநாடு இன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடங்குகிறது.

மாநாட்டில் தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் நலன்கள் குறித்து மாநில தொழில்துறை அமைச்சர்களுடன் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல் செய்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment