ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா! அதிகாரிகளோடு மோடி தீவிர ஆலோசனை;

சில நாட்களுக்கு முன்பு நம் இந்தியாவில் கண்ணுக்கு தெரியாமல் பரவி மிகுந்த உயிர் பலியை உருவாக்கியது கொரோனா .இந்த கொரோனா நோய் தற்போது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது.

கொரோனா

இருப்பினும் ஆங்காங்கே கொரோனாவின் தாக்கம் தெரிகிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் கடந்த சில வாரங்களாக புதிய வகை உருமாறிய கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்து நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி காணொளியில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆப்ரிக்க நாடுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா இந்தியாவிற்குள் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார செயலாளர் ராஜன் நிதி அயோக் உறுப்பினர், வி கே பால் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர். அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பீ.கே. மிஸ்ரா போன்றோரும் ஆலோசனையில் கலந்திருந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment