Connect with us

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு..? அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை !!

narendramodi

செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு..? அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை !!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு..? அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை !!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி வருகின்ற 27- ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3-வது அலையின் போது நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா தொற்று தடுப்பூசி பணிகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளால்  கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது.

கடந்த 2 மாதங்களாக குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

இதனிடையே  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று அதிகரித்துள்ளதால் வரும் புதன்கிழமை அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top