ரஷ்ய அதிபருக்கு போன் செய்த மோடி; போரை நிறுத்த கோரிக்கை! உக்ரைன் தூதர் கோரிக்கையை ஏற்றாரோ?
நேற்று உலக நாடுகள் எதிர்பார்க்காத விதமாக ரஷ்ய அதிபர் புடின் மீது போர் அறிவிப்பை கூறியிருந்தார். இதன் விளைவாக ரஷ்யப் படைகள் வேகமாக உக்ரைனை கைப்பற்றி வருகின்றன.
இதனால் மக்கள் மெட்ரோ சுரங்க பாதைகளில் வரும் நிலையில் உள்ளனர். இருப்பினும் ரஷ்ய ராணுவம் உக்ரைன் ராணுவ விமானத் தளங்களை அதிகளவு மும்முரத்தோடு தாக்கிக் கொண்டு வருகிறது. இந்தப் போரை தடுக்க உலக நாடுகள் ஒவ்வொன்றும் முயற்சி செய்து வருவதாக காணப்படுகிறது.
அதுவும் குறிப்பாக இந்தியாவுக்கான உக்ரேன் தூதர் பிரதமர் மோடி பேசினால் நிச்சயமாக ரஷ்ய அதிபர் புடின் கேட்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருந்தார். இதனால் இந்தியாவின் நிலைமை என்ன என்று தெரியாமல் ரஷ்யா, உக்ரைன் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் குழப்பத்தில் இருந்தது.
இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டு அதன் பின்னர் ரஷ்ய அதிபர் புடினுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது பேசிய அவர் உக்ரேனில் நடத்திவரும் போரை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கோரிக்கையை வைத்துள்ளார்.
