எனக்காகவா விவசாயிகள் இறந்தார்கள் என்று கேட்டார் மோடி! மேகலாயா ஆளுநரின் பரபரப்பான குற்றச்சாட்டு;

விவசாயிகளுக்கு பெரும் இன்னலாக காணப்பட்டது  வேளாண் சட்டங்கள். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு வேளாண் திட்டங்களை திரும்பி பெற்றது. இது குறித்து மேகாலய ஆளுநர் பாரத பிரதமர் நரேந்திர மோடியை பற்றி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

சத்யபால் மாலிக்

அதன்படி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு கோரியபோது பிரதமர் மோடி ஆணவமாக பேசியதாக மேகாலய ஆளுநர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அரியானா மாநிலம் தாத்திரியில் பேசிய மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் 500 பேர் உயிர் இழந்து விட்டார்கள் என்று கூறினேன் என்றும் மேகாலய ஆளுநர் கூறினார். விவசாயிகள் எனக்காகவா மாட்டார்கள் என்று மோடி திருப்பி கேட்டதாக மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

உங்களுக்காகத்தான் மாண்டனர் ஏனென்றால் நீங்கதான் மன்னர் என்று தான் கூறியதாக தெரிவித்தார் சத்யபா சட்டங்கள் பற்றி மோடியிடம் பேசப் போய் இறுதியில் அவருடன் மோதலில் முடிந்துவிட்டதாக மேகாலய ஆளுநர் சத்யபால் பேசினார். மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடி மீது கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment