Connect with us

குரு தேஜ்பகதூரின் 400 வது பிறந்தநாள்: இன்று இரவு செங்கோட்டையில் மோடி உரையாற்றுகிறார்!

guru tegh bahadur commemoration

செய்திகள்

குரு தேஜ்பகதூரின் 400 வது பிறந்தநாள்: இன்று இரவு செங்கோட்டையில் மோடி உரையாற்றுகிறார்!

குரு தேஜ்பகதூரின் 400 வது பிறந்தநாள்: இன்று இரவு செங்கோட்டையில் மோடி உரையாற்றுகிறார்!

அனைத்துவிதமான மதங்களில் ஒருங்கிணைப்பாக நம் இந்தியா காணப்படுகிறது. இதனால் இந்தியாவினை மதசார்பற்ற நாடு என்று கூறலாம். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சிறப்பு விழாக்கள் நடைபெறுகிறது.

இதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார். அதுவும் குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

அந்தப்படி இன்றைய தினம் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். டெல்லி செங்கோட்டையில் இன்று இரவு 9.15 மணிக்கு நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

சீக்கிய மத குருவான குரு தேஜ்பகதூரின் 400 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் குரு தேஜ்பகதூரின் நினைவு நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை வெளியிடுகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாடகர்கள், குழந்தைகள் பங்கேற்கும் ஷாபாத் கீர்த்தனை நிகழ்ச்சியும் இன்று நடைபெறுகிறது. சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான கட்காவும் விழாவில் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top