தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மீண்டும் மிதமான மழை! ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை!!-வானிலை ஆய்வு மையம்;

நவம்பர் மாதம் முழுவதும் நம் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. ஆனால் டிசம்பர் மாதம் ஆரம்பித்த பின்னர் தமிழகத்தில் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

அதன்படி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

மிதமான மழை

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. டிசம்பர் 31 ஜனவரி 1, 2 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment