தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கோடையின் வெப்பம் உச்சம் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் வெப்ப சலனத்தை சமாளிக்க தமிழக சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் கொடைக்கானலில் காட்டுத் தீ !

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வந்த தகவல் மக்கள் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.