தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை… வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

கிரிக்கெட் வீரர் குணதிலகவுக்கு ஜாமீன் மறுப்பு!! சிட்னி நீதிமன்றம் அதிரடி!

இதனை தொடர்ந்து வருகின்ற நவ.10-ம் தேதி கோவை, நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நவ.11-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் குணதிலகவுக்கு ஜாமீன் மறுப்பு!! சிட்னி நீதிமன்றம் அதிரடி!

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment