தமிழகத்தின் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை!

வெப்பமண்டல சூறாவளியின் கீழ் அடுக்குகள் காரணமாக, கிழக்கு மற்றும் மேற்கு காற்று தென்னிந்தியாவில் சந்திக்கும், இதனால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

பால் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு – நாசர்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.