Connect with us

மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

மழை

தமிழகம்

மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

நாளையதினம் தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டையில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிப்ரவரி 21 தேதியில் தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top