தமிழகத்தின் 24 மணிநேரத்திற்கு மிதமான மழை !

கடலில் காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மிதமான மழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் மழை படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளனர்

தருமபுரி, தூத்துக்குடி, கோவை, சேலம், கன்னியாகுமரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் கடலோர மற்றும் உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு ஆலங்கட்டி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் சில இடங்களில் இரவு நேரத்தில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடரும். இருப்பினும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வறண்ட நிலையிலேயே இருக்கும்.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் – இபிஎஸ்

மேலும், அதிக காற்றழுத்த தாழ்வு நிலையின் (16-ம் தேதி) தாக்கம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கடலோரக் கரையோரம் கடல் சீற்றமாக இருக்கும் என்று வடக்கு மற்றும் தெற்கு தமிழகத்திற்கு இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.