15 மாவட்டங்களில் மாடல் ஸ்கூல் – பள்ளிக்கல்வித்துறைக்கு பலே அறிவிப்புகள் வெளியீடு!

பள்ளிக் கல்வித்துறைக்கு இன்றைய பட்ஜெட் உரையில் பல்வேறு அசத்தல் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

  • கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக. மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டம் நமதுநாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள்பயனடைந்து வருகின்றனர்.

 

  • கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

  • STEAM – அதாவது அரசுப்பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியங் கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு செயல்படுத்தப்படும்.

 

  • கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில்முன்மாதிரிப் 10 பள்ளிகளை அரசு தொடங்கியுள்ளது. வரும் இந்த நிதியாண்டில்,மேலும் மாவட்டங்களில் 15 இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்படும்(Model Schools) .இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் நவீமையமாக்குவதற்கான பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும்
    திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில்,அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்புதொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் smart classrooms), இதரப் பள்னிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும்.

 

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில்,இத்திட்டங்கள்படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment