சாதி குறித்த அவதூறு கருத்து!! பில்டப் மாடல் மீரா மிதுன் தலைமறைவு!!

நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகையும், மாடல் அழகியுமாக இருப்பவர் நடிகை மீரா மிதுன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சோசியல் மீடியாவில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு செய்து நடிகை மீரா மிதுன், சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில் ஜாமீனில் வெளியே வந்த மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது காவல் துறையினர் தரப்பில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவரை  பித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தம் என கூறியுள்ளனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையானது செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.