தீவிர புயலாக வலுவடைந்தது ‘மோக்கா’: மணிக்கு 175 கிமீ வேகத்தில் சூறைக்காற்று..!

வங்க கடலில் தோன்றிய மோக்கா புயல் வலுவடைந்ததை அடுத்து மணிக்கு நூற்றி எழுபத்தைந்து கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்பதும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது புயலாக உருவாகியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது போர்ட் பிளேயர் பகுதிக்கு மேற்கே 520 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் நாளை காலை மத்திய வங்க கடலில் இருந்து படிப்படியாக தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளில் இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 160 முதல் 175 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோக்கோ புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன. மீட்பு குழுவினர் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவசர எண்கள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகளுமே புயலின் சேதத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews