மோசடியில் ஈடுப்பட்ட மொபைல் கேம் ஆப்: கட்டு கட்டாக ரூ.7 கோடி பறிமுதல்!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாகவே மொபைல் கேம் ஆப் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்டு வந்தாக புகார்கள் எழுந்து வந்தது.

இந்நிலையில் மொபைல் கேம் ஆப் நிறுவன உரிமையாளர் நிசார் அகமது கானுக்கு சொந்தமான இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு படுக்கை அறையில் ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பணத்தை எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை எண்ணும் பணியில், அதிகாரிகள் ஈடுப்பட்டனர். அப்போது கிட்டத்தட்ட சுமார் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மொபைல் கேம் செயலி மற்றும் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறதா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment