Connect with us

நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை : பச்சக் கொடி காட்டினார் முதல்வர் !!

stalin ambulance

Tamil Nadu

நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை : பச்சக் கொடி காட்டினார் முதல்வர் !!

தமிழகத்தில் நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை விரைவில் தொடங்கும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் 389 புதிதாக நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இதனிடையே ஒரு வாகனத்திற்கு சுமார் 18 லட்சம் செலவில் 389 வாகனத்திற்கு 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் உயர்ந்த மருத்துவ சேவை மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மலை கிராமங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் இருக்கும் மக்கள் பயன்படும் விதத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகளை பரிசோதித்தல், தோல்நோய் சிகிச்சை, காசநோய் சிகிச்சை, ரத்தம், சிறுநீரகம், சளி, ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை இத்திட்டத்தின் மூலமாக பரிசோதனை செய்துகொள்ளலாம்.

மேலும் திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் பல்வேறு கிராமங்களில் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருதற்காக முதற்கட்டமாக 132 வாகனங்கள் அன்மையில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக 389 வாகன சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top