#Shocking Video பட்டப்பகலில் பழங்குடியின பெண்ணை சுற்றி வளைத்த இளைஞர்கள்… நடுரோட்டில் பாலியல் தொல்லை!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர், பல ஆண்களால் பொது இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலாகி பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் இருந்து 392 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அலிராஜ்பூர் மாவட்டம், இங்கு பழங்குடியின பெண்கள் பகோரியா என்ற திருவிழாவை காணச் சென்றுள்ளனர். அப்போது பட்டப்பகலில் பொது இடம் என்று கூட பார்க்காமல், பழங்குடியின பெண் ஒருவரை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தங்களது வக்கிரத்தை அவர் மீது கட்டவிழ்ந்துவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் பழங்குடியின பெண் ஒருவரிடம் முதலில் ஒரு நபர் தவறாக நடந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதன் பின்னர் சுற்றி இருந்த பல ஆண்கள் சேர்ந்து, அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சாதிய ரீதியாக பழங்குடியின பெண் என்பதால், அங்கிருந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் வரம்பு மீறி அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
முதலில் ஒரு இளைஞர் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து பாலியல் துன்புறுத்தலில் இறக்குகிறார். சுற்றி நின்று அதனை வேடிக்கை பார்த்த ஆண்களோ, அடுத்தடுத்து பாலியல் ரீதியாக அந்த பழங்குடியின பெண்ணிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
சோசியல் மீடியாவில் வைரலான இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முதற்கட்டமாக 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Horrifying! https://t.co/IbpRWSWByL
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) March 13, 2022
