
செய்திகள்
எக்காரணம் கொண்டும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. ஏனென்றால் சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக மாறி உள்ளதால் அங்கு எம்எல்ஏக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில் மராட்டிய எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி வரை மராட்டிய அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க மராட்டிய மாநில அரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா எம்எல்ஏக்கள் சார்பாக ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசேனா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மராட்டிய பேரவை செயலாளரும் பதில் தரவும் உச்ச நீதிமன்ற நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் அங்கு உள்ள எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
