Connect with us

பாஜக ஊர்வலத்தில் காரை ஏற்றிய எம்.எல்.ஏ !! பலர் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு..

பாஜக

News

பாஜக ஊர்வலத்தில் காரை ஏற்றிய எம்.எல்.ஏ !! பலர் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு..

பாஜக ஊர்வலத்தில் காரை ஏற்றிய எம்.எல்.ஏ !! பலர் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு..

ஒடிசாவில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வின் கார் பாஜக ஊர்வலத்தில் புகுந்ததில் 20- க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒடிசாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வரும் 24 தேதியுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில் பானாப்பூரில் பாஜகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு இருந்தனர்.

அப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட பிரசாந்த் ஜக்தேவ் என்பவர் அவ்வழியாக காரில் வந்தார்.   போஸீசார் மற்றும் பாஜக தொண்டர்கள் சிலர் அந்த காரை தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கூட்டத்தை நோக்கி காரை வேகமாக ஓட்டியதால் பலர் தூக்கி வீசப்பட்டனர். கார் மோதியதால் ஆத்திரம் அடைந்த பாஜக தொண்டர்கள் பிரசாந்த் ஜக்தேவ் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர் .பிரசாந்த் ஜக்தேவ் மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,  பாஜக தலைவர் ஒருவரை தாக்கியதாக பிரசாந்த் ஜக்தேவ்வை இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top