ஏழிசை மன்னரின் நெற்றியில் கடவுள் கொடுத்த பிறை வடிவம்…. என்ன ஆச்சரியம் பாருங்கள்…!

தியாகராஜபாகவதர் தமிழ் சினிமா உலகின் ஏழிசை மன்னர். இவரது ஆரம்ப காலத்தை நினைத்துப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இவரது நெற்றியில் பிறை வடிவில் ஒரு தழும்பு இருக்கும். அது எப்படி வந்தது என்பதைப் பார்க்கலாம்.

தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர்ஸ்டார் என்று ரசிகப் பெருமக்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தியாகராஜ பாகவதர். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அருமையாகப் பாடவும் செய்வார். இவரது இசை வெள்ளத்தில் மூழ்கி முத்து எடுத்தவர்கள் அக்காலத்தில் ஏராளமானோர் இருந்தனர். இப்போதும் இவரது பாடலைக் கேட்டால் அவ்வளவு ரசனையாக இருக்கும்.

இவரது ஹேர் ஸ்டைல் வேறு செம மாஸாக இருக்கும். அந்தக் கால இளசுகள் அனைவருக்கும் இவர் தான் ரோல் மாடல். காதல் நயமிக்க பாடல்களைப் பாடுவதும், படங்களில் நடிப்பதுமாக ரசிகர்களைத் தன் பக்கம் இறுகக் கட்டிப் போட்டு இருந்தார்.

எம்.கே.டி. என்று செல்லமாக அழைக்கப்பட்ட பாகவதர் 3.1.1910 அன்று தஞ்சாவூரில் பிறந்தார். இவரது பெற்றோர் கிருஷ்ணமூமூர்த்தி ஆச்சாரி, மாணிக்கத்தம்மாள். பிற்காலத்தில் திருச்சியில் குடியேறினர். இவருக்கு 2 சகோதரர்கள். இவர் தான் மூத்த மகன்.

MKT 1
MKT

தியாகராஜ பாகவதருக்கு இளமையில் படிப்பு சரிவர ஏறாமல் இருந்தது. திருச்சியில் பள்ளிப்படிப்பைப் படித்தார். இவரது வாத்தியார் பெயர் அப்பாத்துரை. பாடமும் படிக்கவில்லை என்றதும் இவரது அப்பா தன்னுடன் நகாசு வேலை செய்யும்படி வற்புறுத்தினார். அதே நேரம் பாகவதருக்கு கோவிலில் பாடும் திருப்புகழ், தேவாரப் பாடல்கள் ஆர்வத்தைத் தூண்டின. அதை அடிக்கடிப் பாடி மகிழ்ச்சி அடைந்தார்.

பையனுக்கு படிப்பிலும் கவனம் இல்லை. தொழிலிலும் கவனம் இல்லையே… சும்மா பாட்டுப் பாடிக் கொண்டு அல்லவா இருக்கிறான்… என்ன செய்வது?

கஷ்டகாலத்தில் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்று கலங்கி நின்றார் தந்தை. அவருக்கு ஒரே சொத்து முன்னோர்கள் விட்டுச் சென்ற ஓட்டு வீடு தான். வேறு நிலம் எதுவுமில்லை. கடன் வாங்கித் தான் வாழ்க்கையை ஓட்டினார்.

ஒருமுறை பாகவதர் நண்பர்களை அழைத்து வீட்டில் ஜாலியாக பாட்டுப் பாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் வீட்டின் வறுமையைப் பற்றி உணரவில்லை. அப்போது அங்கு வந்த தந்தைக்கு ஒரே கோபம். பையன் இப்படி பொறுப்பில்லாமல் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறானே… என்று கோபத்துடன் கையில் வைத்திருந்த சுத்தியலால் பாகவதரின் நெற்றியில் ஓங்கி அடித்து விட காயம் பட்டு ரத்தம் கொட்டியது. இதைக் கண்ட தாயோ, ஐயோ மகனே உன் அழகான நெற்றியில் இப்படி ஒரு வடுவை வரவழைத்துவிட்டாயே… இது எப்போது மறையும் என்று கதறி அழுதாள்.

MKT
MKT

ஆனால் காலப்போக்கில் அந்த வடுவே அவருக்கு ஒரு அழகைக் கொடுத்தது. அது தான் கடவுள் தந்த பிறை வடிவம் என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஒரு பக்கம் வலி நிறைந்த வாழ்க்கை என்றாலும் அதன் மறுபக்கம் பாகவதருக்கு வானளாவிய புகழைக் கொடுத்தது என்றால் மறுப்பதற்கில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews