எம்.எஸ்.டி.க்கு எம்.கே.எஸ் தலைமையில் பாராட்டு விழா! சிஎஸ்கே பங்கேற்பு!

கடந்த மாதம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் நான்காவது முறையாக நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தட்டி தூக்கியது. இதனால் தமிழகமெங்கும் இந்த வெற்றி கொண்டாடப்பட்டது.

சிஎஸ்கே

கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்குப் பின்னர் பல்வேறு கருத்துக்களையும், இணையதள பக்கத்தில் தெரிவித்து வந்தனர். அதோடு மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டி முடிந்த பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அனைவரும் சென்னைக்கு வந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அள்ளிக் கொடுத்தனர்.

அப்போது நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரவேற்கக் காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் கேப்டன் தோனிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதன்படி சென்னையில் நவம்பர் 20ம் தேதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இவை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலைவாணர் அரங்கில் கேப்டன் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment